CRIME
“பாரிமுனை கோவிலில் திருமணம்.. அடுத்த நாளே நடந்த அதிர்ச்சி.. இன்ஸ்டா காதலனால் நடுத்தெருவில் நின்ற காதலி.. கல்யாண மன்னனின் பகீர் லீலைகள் அம்பலம்.. பகீர் பின்னணி..!!
ஈரோடு ஆர்.என்.புதூர், சூரியம்பாளையம் மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்த 28 வயதான நந்தினி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கோகுல் என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொண்டு பணம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன் ஆகியவற்றைப் பெற்று மோசடி செய்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்துப் பெற்ற நந்தினி, தனது பெற்றோர் மற்றும் மகனுடன் ஈரோட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கோகுல் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது; இதனைத் தொடர்ந்து தனது கடன் பிரச்சினையைத் தீர்க்கப் பணம் தேவைப்படுவதாகக் கோகுல் கூறியதை நம்பி, நந்தினி வங்கியில் தனிநபர் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 54 ஆயிரம், சிறுக சிறுகப் பணமாகச் சுமார் ரூ.2 லட்சம் மற்றும் தவணை முறையில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நந்தினியைச் சென்னைக்கு அழைத்துச் சென்ற கோகுல், பாரிமுனை தம்பு செட்டித் தெரு அருகே உள்ள பெரியமேடு பத்ரகாளி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஈரோடு திரும்பிய கோகுல், சொந்த ஊரில் ஒரு பிரச்சினை இருப்பதாகக் கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இது குறித்து நந்தினி விசாரித்தபோது, கோகுல் ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதும், தன்னைப் போலவே திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்களைக் குறிவைத்துப் பழகி பணம் பறிப்பதும் தெரியவந்துள்ளது; இதேபோல் திருப்பூரைச் சேர்ந்த ரோஹினி என்ற பெண்ணும் பாதிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடர்ந்து வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்துமாறு நந்தினி வலியுறுத்தியதை அடுத்து, கோகுல் தரப்பிலிருந்து இரண்டு தவணைகளாக ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பித் தரப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள கடன் தொகையைக் கேட்டபோது தர மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி ஆள் வைத்துக் கடத்திக் கொலை செய்துவிடுவதாகக் கோகுல் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நந்தினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை நீக்குமாறு கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெவ்வேறு எண்களில் இருந்து மிரட்டி வருவதால், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துத் தனது பணத்தை மீட்டுத் தருவதோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நந்தினி கோரிக்கை விடுத்துள்ளார்.
