“அட என்னப்பா சொல்லுறீங்க..!” லீவு போடாமல் ஸ்கூலுக்கு வந்தால்ரூ ரூ.8,600 பரிசா.. பள்ளிகள் வெளியிட்ட அதிரடி ஆஃபர்.. இணையத்தில் வைரலாகும் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட என்னப்பா சொல்லுறீங்க..!” லீவு போடாமல் ஸ்கூலுக்கு வந்தால்ரூ ரூ.8,600 பரிசா.. பள்ளிகள் வெளியிட்ட அதிரடி ஆஃபர்.. இணையத்தில் வைரலாகும் தகவல்..!!

Published

on

உலகெங்கிலும் உள்ள கேமிங் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘GTA 6’ வீடியோ கேம், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் டிரெண்டாகி வருகிறது. இந்தக் கேமை விளையாடுவதற்காக மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைத் தடுக்கும் நோக்கில், இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகள் நூதனமான முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளன. மாணவர்களின் வருகைப் பதிவை உறுதி செய்யவும், அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கவும் அந்தப் பள்ளிகள் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதன்படி, நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தவறாமல் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களில் இருந்து, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ₹8,600 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள் வழங்கப்படும் என அந்தப் பள்ளிகள் அறிவித்துள்ளன. வீடியோ கேம் மோகத்தால் மாணவர்கள் கல்வியைத் தவறவிடக் கூடாது என்பதற்காகப் பள்ளி நிர்வாகங்கள் எடுத்துள்ள இந்த வித்தியாசமான நடவடிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் சுவாரசியமான விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in