“40 வருஷத்துல இப்படி ஒரு துரோகியை பார்த்ததே இல்ல… சக வீரர்களின் ரகசியங்களை இப்படி போட்டு உடைச்சிட்டாரே..” உஸ்மான் கவாஜா மீது பொங்கிய முன்னாள் வீரர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“40 வருஷத்துல இப்படி ஒரு துரோகியை பார்த்ததே இல்ல… சக வீரர்களின் ரகசியங்களை இப்படி போட்டு உடைச்சிட்டாரே..” உஸ்மான் கவாஜா மீது பொங்கிய முன்னாள் வீரர்..!!

Published

on

2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை உலுக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து தனது ‘Sabr’ என்ற சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா வெளியிட்ட தகவல்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2018-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் பான்கிராஃப்ட் சாண்ட்பேப்பர் கொண்டு பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தண்டிக்கப்பட்ட நிலையில், இத்திட்டம் அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்றும், மூன்று பேர் மட்டுமே பொறுப்பேற்றது சரியல்ல என்றும் கவாஜா குறிப்பிட்டுள்ளார். மேலும், கெபர்ஹா டெஸ்ட் போட்டிக்கு முன்பே சாண்ட்பேப்பர் பயன்படுத்தப்பட்டதாகவும், 2017-18 ஆஷஸ் தொடரிலும் ரிவர்ஸ் ஸ்விங்கிற்காக பந்தின் தையல் பகுதியை சேதப்படுத்த முயற்சி நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஃபானி டி வில்லியர்ஸ், தனது 40 முதல் 50 ஆண்டுகால கிரிக்கெட் அனுபவத்தில் பார்த்த மிகப்பெரிய துரோகி என கவாஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். சக வீரர்களின் ரகசியங்களை வெளியிட்டு அணிக்குள் இருந்த நட்பையும் நம்பிக்கையையும் கவாஜா சீர்குலைத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இதற்கிடையே, பான்கிராஃப்ட்டும் வெளியிட்ட கட்டுரையில், வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளிட்ட அணியின் பலருக்கும் இத்திட்டம் தெரியும் என்றும், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களிடமிருந்து தமக்கு ஊக்கம் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சுமார் ஒரு மாதம் நடைபெறவுள்ள சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளதுடன், விசாரணையில் புதிதாக எந்த வீரர் மீதும் தண்டனை விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in