LATEST NEWS
“சட்டம்-ஒழுங்கிற்கு சவக்குழி..!” ஆட்சிக்கு வந்த நாள் முதலே இதுதான் நடக்கிறதா..? CM விஜய்யை விளாசிய உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். நவம்பர் 20, 2026 அன்று அவர் வெளியிட்டுள்ள X பதிவில், திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் ஆண், பெண் என இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், சென்னை பல்லாவரத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த நாள் முதலே சட்டம் – ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்து கொண்டிருப்பதாகவும், தற்போதைய சூழலைச் சமாளிக்க டி.ஜி.பி-யை விட்டுப் புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து முதலமைச்சர் சமாளிக்கப் பார்க்கிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இனியாவது மற்றவர்கள் மீது பழிபோடும் தந்திரங்களையும் வெறும் விளம்பரத்திற்கான காட்சி அரசியலையும் கைவிட்டு, மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
