உதயநிதிக்கு வழிவிடும் ஸ்டாலின்..?…. திமுகவுக்குள் வெடித்த தலைமுறை யுத்தம்… ஆட்சியைத் தக்கவைக்க விஜய் போடும் ஸ்கெட்ச்…. கொளத்தூரில் காத்திருக்கும் ட்விஸ்ட்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உதயநிதிக்கு வழிவிடும் ஸ்டாலின்..?…. திமுகவுக்குள் வெடித்த தலைமுறை யுத்தம்… ஆட்சியைத் தக்கவைக்க விஜய் போடும் ஸ்கெட்ச்…. கொளத்தூரில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!

Published

on

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வீழ்த்தி தேசிய அளவில் கவனம் ஈர்த்த தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ வி.எஸ். பாபு, நேற்று மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. விரைவில் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2008-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கொளத்தூரில் தொடர்ந்து மூன்று முறை வென்ற ஸ்டாலின், நான்காவது முறையில் தோல்வியடைந்தார். தற்போது ஏற்பட்டுள்ள இடைத்தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்பதே திமுக மூத்த தலைவர்களின் விருப்பமாக உள்ளது. இதன் மூலம் கட்சியின் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

Advertisement

அதேசமயம், திமுக அடுத்த தலைமுறையை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஸ்டாலின் தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தும் இளம் நிர்வாகிகளிடையே நிலவுகிறது. குறிப்பாக, தற்போது ‘விஜய் எதிர் உதயநிதி’ என்ற அரசியல் களம் உருவாகியுள்ள நிலையில், ஸ்டாலின் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானால் உதயநிதியின் முக்கியத்துவம் குறையக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் கருதுவதால், இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

மறுபுறம், வி.எஸ். பாபுவின் மறைவால் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான தவெக-வின் பலம் 108-ஆகக் குறைந்துள்ளது. தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சியைத் தக்கவைக்க ஒவ்வொரு வெற்றியும் தவெக-விற்கு அவசியமாக உள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மற்ற 5 தொகுதிகளுடன் கொளத்தூரிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களைக் கைப்பற்ற தவெக தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in