“கண்ணும் தெரியாது… நடக்கவும் முடியாது..” ஆனாலும்  கொலையாளியாக்கிய போலீஸ்..! செய்யாத குற்றத்திற்கு 27 மாதங்கள் சிறை… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கண்ணும் தெரியாது… நடக்கவும் முடியாது..” ஆனாலும்  கொலையாளியாக்கிய போலீஸ்..! செய்யாத குற்றத்திற்கு 27 மாதங்கள் சிறை… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள கடே கணேஷ்ஜி கோயில் வளாகத்திற்கு வெளியே, 2023 டிசம்பர் 28-ஆம் தேதி கலா ஜோகி என்ற மாற்றுத்திறனாளி ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த போலீசார், பிறவியிலேயே பார்வையற்ற பன்ஷிலால் மற்றும் நடக்க முடியாத பிரிஜ்மோகன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். பின்னர் இருவர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பன்ஷிலால் பிறவியிலேயே பார்வையற்றவராகவும், பிரிஜ்மோகன் நடந்து செல்ல முடியாத நிலையிலும் இருந்தனர். ஆனாலும் இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பன்ஷிலால் 9 மாதங்களும், பிரிஜ்மோகன் 27 மாதங்களும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

Advertisement

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க அரசுத் தரப்பால் போதிய ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. இதையடுத்து இருவரையும் நீதிமன்றம் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்தது. செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருந்த இருவரும் தற்போது வெளியே வந்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை; அவர் தொடர்ந்து போலீசாரிடம் சிக்காமல் உள்ளார். குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்ட இந்த இருவரின் வாழ்க்கையில் இழந்த மொத்த 36 மாதங்களுக்கும், அவர்களது குடும்பத்தினர் அனுபவித்த வேதனைக்கும் யார் பதில் சொல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in