“ராகு கேது பெயர்ச்சி 2020”..! – ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்ன..? – cinefeeds
Connect with us

Uncategorized

“ராகு கேது பெயர்ச்சி 2020”..! – ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்ன..?

Published

on

ராகு-கேது பெயர்ச்சி இன்று பகல் 2.10 மணிக்கு மிருகசீர்ஷம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசியில் ராகுவும், கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள்.

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின்படி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

Advertisement

மேஷம்: செவ்வாய் பகவான் அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் முருகப்பெருமானை செவ்வாய் கிழமைகளில் தரிசித்து வர வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.

தினமும் கந்த சஷ்டி கவசம் பாடி வர மன பாரம் குறைந்து, மன வலிமை அதிகரிக்கும்.

Advertisement

ரிஷபம்: தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடவும். தினமும் 3 மணி நேரம் விளக்கு எரிவதால் வீட்டில் நன்மையும், செல்வமும் சேரும்.

ஸ்ரீ ரங்கனை வணங்கி வருவதால் சர்ப்ப கிரக தோஷங்கள் நீங்கும்

Advertisement

நட்சத்திரத்திற்குரிய மரத்தை நட்டு வளர்ப்பது நல்லது.

மிதுனம்: அனைத்து தடைகளும் நீங்கி நன்மைகள் அதிகரிக்க நரசிம்மரை வியாழக்கிழைகளில் வழிபட்டு வருவது அவசியம்.

Advertisement

கடகம்: முருகப் பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவதும், முடிந்தால் பாலபிஷேகம் செய்து வழிபடுவதால் அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும்.

அம்மன் கோயிலுக்கு சென்று வருதலும், விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

Advertisement

சிம்மம்: செவ்வாய் தோறும் நாக தேவர் வழிபாடு செய்யவும்.

வில்வ இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ய அனைத்து தடங்களும் விலகும்.

Advertisement

ஓம் நமசிவாயா நம மந்திரத்தை தினமும் 11 முறை உச்சரித்து வர சகல பிரச்சினைகளும் தீரும்.

கன்னி: அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி அணிவித்து வழிபட்டு வருவதும், ஐயப்ப ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் உங்கள் பிரச்னைகள் விலகும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.

Advertisement

வீட்டில் பெருமாளுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யலாம். அப்படி செய்யும் போது. “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தையும், அவருக்கு பிடித்த மற்ற மந்திரங்களை உச்சரிக்கலாம்.

துலாம்: குல தெய்வ வழிபாடும். மகாலட்சுமி மற்றும் முருகப் பெருமான் வழிபாடு செய்து வர காரிய வெற்றியும், மங்களமும் உண்டாகும்.

Advertisement

விருச்சிகம்: ராசிக்குரிய அதிபதி முருகனை நித்தமும் வணங்கி வருவதாலும், துர்க்கை அம்மனை வழிபட்டு வர மன இறுக்கம் நீங்கி, மகிழ்ச்சி மற்றும் தைரியம் கூடும். செயலில் வெற்றியைக் காணலாம்.

தினமும் கந்த சஷ்டி கவசம் பாடி வர வெற்றியைத் தரும்.

Advertisement

தனுசு: ராகு கேது பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது. சனி பகவானுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மகரம்: சனி பகவான் ஆட்சி செய்யும் மகர ராசியில் பிறந்த நீங்கள் கணபதியை வணங்குவதும், ஆஞ்சநேயரை வணங்கி வருவதால் சனி பகவானின் நல்ல பார்வை கிடைக்கும்.

Advertisement

நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட்டு, அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள்.

கும்பம்: புதன் கிழமைகளில் மஞ்சள் நிற மலர்கள் கொடுத்தும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வராகி அம்மன் வழிபாடு செய்வதும்.

Advertisement

ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

தினமும் விநாயகரை வழிபாடு செய்வதால் வல்வினைகள் நீங்கும்.

Advertisement

மீனம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபடுவதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை, வழிபாடு செய்வதால் உங்கள் முயற்சிக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

தினமும் குருவுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in