CRIME
BREAKING: தூத்துக்குடியில் பரபரப்பு…! பட்டப்பகலில் பள்ளி மாணவி கதற கதற குத்திக்கொலை.. தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை..!!
தூத்துக்குடியில் பள்ளி மாணவி கதற கதற குத்திக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வேதமாணிக்கபுரத்தில் +1 படிக்கும் பள்ளி மாணவி, பட்டப்பகலில் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக வேதமாணிக்கபுரத்தில் உள்ள அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற முத்துராஜா என்ற இளைஞர், அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். மாணவியைக் கொலை செய்த பிறகு, முத்துராஜா தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலை முயற்சியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முத்துராஜாவிற்கு, தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
