LATEST NEWS
“அவர் மேல ஒரு துரும்பு கூட விழ விடமாட்டேன்..” பாதுகாவலர் வேலையை நானே செய்வேன்… விஜய்க்காக வைகோ எடுத்த அதிரடி நிலைப்பாடு..!!
முதல்வர் விஜய்க்கு தான் வழங்கும் பாதுகாப்புக்கு ஈடாக நூறு பேர் இருந்தாலும் கொடுக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விஜய்யின் மீது ஒரு துரும்பு கூட விழாத அளவுக்கு அவரைப் பத்திரமாக அழைத்துச் சென்றதாகவும், தாம் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ விஜய்யைத் தள்ளி விடுவது போல் யாராவது நெருங்கினால், அவர்களைத் தாம் தள்ளி விட்டுப் பாதுகாப்பேன் என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும், ஒரு பாதுகாவலர் செய்ய வேண்டிய கடமையைக் கூடத் தயங்காமல் தாமே செய்வேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விஜய் மீதான தனது அக்கறையையும், அவருக்கு அரணாக நிற்கும் உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக வைகோவின் இந்தக் கருத்து அமைந்துள்ளது.
