“சாதி பார்த்து டிக்கெட் கொடுக்குறாங்க… வெளியே போடான்னு துரத்துனாங்க..” தியேட்டரில் இளைஞருக்கு நடந்த அவமானம்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சாதி பார்த்து டிக்கெட் கொடுக்குறாங்க… வெளியே போடான்னு துரத்துனாங்க..” தியேட்டரில் இளைஞருக்கு நடந்த அவமானம்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

Published

on

திருவண்ணாமலையில் உள்ள சக்தி திரையரங்க நிர்வாகிகள் மீது இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். படம் பார்க்கச் சென்ற தன்னை திரையரங்க நிர்வாகிகள் டிக்கெட் தர மறுத்ததோடு, தரக்குறைவாகவும் இழிவான வார்த்தைகளாலும் திட்டி, அடித்து விரட்டியதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். சக்தி திரையரங்கில் படம் பார்க்கச் செல்லும் யாராக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கேட்கும்போது தரக்குறைவாகப் பேசுவதாகவும், ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் எனக் கேட்டால் டிக்கெட் தர முடியாது என்று கூறுவதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் குடித்துவிட்டு சண்டை போடுவதாகத் திரையரங்கத் தரப்பில் பழி சுமத்தியதாகக் கூறிய அந்த இளைஞர், அங்கிருந்த மக்களிடம் தாம் குடித்திருக்கிறேனா எனக் கேட்டபோது அவர்கள் இல்லை என்றே கூறியதாகத் தெரிவித்துள்ளார். டிக்கெட் தர முடியாது என்று கூறி வெளியே செல்லச் சொன்னதால், காவல்துறைக்குத் தொலைபேசி மூலம் அழைத்து வெளியே காத்திருந்ததாகவும், அப்போது ஒவ்வொருவராக வந்து தம்மைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார். தாம் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால், திரையரங்க நிர்வாகி ஒருவர் தாம் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்று கருதி டிக்கெட் கொடுக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

அங்கிருந்த நாற்காலியில் தாம் அமர்ந்தபோது, தம்மை இழிவாகப் பேசி திட்டியதாகவும் அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகம் சார்பிலும் வீடியோ வெளியிடப்பட்டு மறுப்பு மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in