CRIME
“பூங்காவில் சாக்குப்பைக்குள் கிடந்த சடலம்… 30 மீட்டர் தொலைவில் மண்டை ஓடு..” 10 வயது இளையவரைக் காதலித்துத் திருமணம் செய்த பெண்… 5 மாதத்திலேயே காத்திருந்த கொடூர முடிவு.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தன்னைவிட 10 வயது இளையவரான காதலனைத் திருமணம் செய்த இளம்பெண், சந்தேகத்தின் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஜாதா (34) என்ற பெண்ணின் முதல் கணவர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனக்கு 10 வயது இளையவரான ஃபயாஸ் பாஷா (24) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு மத வழக்கங்களைக் கடந்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே சுஜாதாவின் நடத்தையில் ஃபயாஸ் பாஷா சந்தேகப்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கொடிகேஹள்ளி பகுதியில் உள்ள குண்டாஞ்சநேயர் கோயில் பூங்காவில் இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஃபயாஸ் பாஷா, சுஜாதாவைக் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி, பூங்காவில் உள்ள குப்பைகளுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சமீபத்தில் அந்தப் பூங்காவில் உள்ள சாக்குப்பையிலிருந்து சுஜாதாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அவரது மண்டை ஓடு தனியாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது; இதன் மூலம் ஃபயாஸ் பாஷா அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஃபயாஸ் பாஷாவைக் கைது செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மதுபோதையில் ஏற்பட்ட சண்டையில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
