LATEST NEWS
“வடக்கே ராமர்… இங்கே முருகன்…” பாஜக, இந்து முன்னணி அரசியலைத் தோலுரித்த மாணிக்கம் தாகூர்..!!
வட இந்தியாவில் ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்வது போல, தமிழகத்தில் முருகனை வைத்து பாஜகவும் இந்து முன்னணியும் பிழைப்புவாத அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் ஊர் மரபுப்படி அப்பகுதி மக்கள் உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றி வருகின்றனர் என்றும், கடந்த 300 ஆண்டுகளாக இந்த நடைமுறையே தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முருகன் இத்தகைய அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவர் எல்லா மதம் மற்றும் ஜாதியினருக்கும் பொதுவானவர் என்றும் மாணிக்கம் தாகூர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
