LATEST NEWS
போலி சாமியார் போல… இந்த CM விஜய் யார் தெரியுமா..? கிழித்தெடுத்த உதயநிதி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தந்தை பெரியாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘குடிஅரசு’ இதழின் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் தரப்பினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது உரையில், சமூகத்தில் போலிச் சாமியார்களை இதுவரை பலரும் பார்த்திருப்போம் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இப்போதுதான் போலிப் பெரியாரிஸ்டுகளையும், போலி முதலமைச்சரையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சாடினார்.
பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவது போல் நடிப்பவர்களையும், முதலமைச்சர் பதவியில் இருப்பவரின் செயல்பாடுகளையும் நேரடியாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
