“குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள்…” உதவி செய்வது போல் நடித்து தோழியே செய்த பகீர் காரியம்.. ஸ்கேன் சென்டர் வாசலில் அரங்கேறிய திகில் சம்பவம்.. போலீஸ் விசாரணையில் உடைந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள்…” உதவி செய்வது போல் நடித்து தோழியே செய்த பகீர் காரியம்.. ஸ்கேன் சென்டர் வாசலில் அரங்கேறிய திகில் சம்பவம்.. போலீஸ் விசாரணையில் உடைந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த அக்டோபர் 28-ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்ததால் 20 நாட்களுக்குப் பிறகு பரிசோதனைக்கு அழைத்து வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதற்கிடையே, சந்தோஷிற்குத் தெரிந்த நரேஷ் என்பவரின் மனைவி ஜெயப்பிரியா, தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவால் குழந்தை பிறக்காது என எண்ணி, பிரியதர்ஷினியின் குழந்தையைத் தனது தாயார் புவனாவுடன் சேர்ந்து அபகரிக்கத் திட்டமிட்டார்.

இத்திட்டத்தின்படி, நவம்பர் 21-ம் தேதி குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரியதர்ஷினியை ஜெயப்பிரியாவும் புவனாவும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் ஸ்கேன் பரிசோதனை செய்யச் சொன்னதைத் தொடர்ந்து, 24 நாட்களே ஆன குழந்தையைப் புவனாவிடம் கொடுத்துவிட்டு, பிரியதர்ஷினியும் ஜெயப்பிரியாவும் அருகிலுள்ள கோகுல் ஸ்கேன் சென்டருக்கு டோக்கன் பெறச் சென்றனர்.

Advertisement

அப்போது ஜெயப்பிரியா தனது தாயார் புவனாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குழந்தையை விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். புவனா குழந்தையை லத்திகாவிடம் ஒப்படைத்த பிறகு, குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாகவும், போலீசார் விரட்டிச் சென்று மீட்டு வீட்டிற்குக் கொண்டு வருவார்கள் என்றும் ஜெயப்பிரியா பொய் கூறி பிரியதர்ஷினியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் சந்தேகமடைந்த பிரியதர்ஷினி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயப்பிரியா மற்றும் புவனாவின் கடத்தல் நாடகம் அம்பலமானது. இதையடுத்து லத்திகாவிடம் இருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதோடு, திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரியா மற்றும் புவனாவைக் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in