CRIME
“சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு இதுதானா..?” தாஜ்மஹாலில் குழந்தையைத் தொலைத்துத் தவித்த குடும்பம்… உதவி கேட்டதற்கு CISF வீரர்கள் செய்த அதிர்ச்சிச் செயல்.. இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க வந்த டெல்லியைச் சேர்ந்த இஸ்லாமியக் குடும்பம் ஒன்றை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து சுற்றுலாவாகத் தாஜ்மஹாலுக்கு வந்திருந்த அந்தக் குடும்பத்தினரின் குழந்தை கூட்ட நெரிசலில் திடீரெனக் காணாமல் போயுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், தங்களது குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களை அணுகியுள்ளனர்.
குழந்தையைத் தேட உதவி கேட்டபோது, அங்கு பணியிலிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களுக்கு உதவுவதற்குப் பதிலாகத் தங்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அந்தக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அந்தக் குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் மற்றும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய வீரர்களே, குழந்தையைத் தொலைத்துவிட்டுத் தவித்த குடும்பத்தினரிடம் இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
