CRIME
“ச்சீ.. கொஞ்சமாவது மனசாட்சியை இல்லையா..?” வாயில் துணியைத் திணித்து, கை விரல்களைத் துண்டித்து கொடூரம்… 3 வயதுப் பிஞ்சுக் குழந்தைக்குப் பக்கத்து வீட்டுப் பெண் செய்த பகீர் செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில் வசித்து வரும் சோனம் என்ற பெண், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த சோனமின் 8 வயது மகள், தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த மான்யா என்ற 3 வயதுச் சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார்.
குழந்தையைக் காணாமல் தவித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தீவிரமாகத் தேடியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, அருகிலுள்ள வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது, சோனம் வசித்து வந்த வாடகை அறைக்குள் இருந்து மாயமான 3 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் வாயில் துணியைத் திணித்தும், கை விரல்களைத் துண்டித்தும் சித்திரவதை செய்து அவரைக் கொலை செய்ததாகச் சோனம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனது சொந்த மகளைப் பிரிந்து வாழும் மன அழுத்தம் அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சோனம் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டாரா? அல்லது மாந்திரீக நம்பிக்கைகள் ஏதேனும் இந்தக் கொலைக்குப் பின்னணியில் உள்ளதா? என்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எதுவுமே அறியாத 3 வயதுப் பிஞ்சுக் குழந்தைக்கு இத்தகைய கொடூரத்தை இழைக்க ஒருவரால் எப்படி மனம் வந்தது என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
