“நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ..” “தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்ன காதலி.. ஆத்திரத்தில் காதலன் தள்ளிவிட்டதில் ஜன்னல் வழியாக விழுந்து இளம்பெண் துடிதுடித்து பலி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ..” “தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்ன காதலி.. ஆத்திரத்தில் காதலன் தள்ளிவிட்டதில் ஜன்னல் வழியாக விழுந்து இளம்பெண் துடிதுடித்து பலி..!!

Published

on

பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆண் நண்பர் தள்ளிவிட்டதில் ஜன்னல் வழியாகக் கீழே விழுந்த 23 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம்பெண் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சந்தோஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். முன்னதாக, ஐஸ்வர்யா தனது தோழி அருந்ததியின் ஆண் நண்பரான சச்சின் என்பவருடன் தனியார் விடுதி அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இத்தகவலைத் தோழி அருந்ததி, ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் ஐஸ்வர்யாவைத் திட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தெரிந்ததிலிருந்து காதலன் சந்தோஷும் ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்டு, அவரை நம்பாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஐஸ்வர்யாவும் சந்தோஷும் பெங்களூரு கங்கம்மனகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு லாட்ஜிற்குச் சென்றுள்ளனர். அன்று மாலை இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்பத்தினரும் சரி, காதலனான நீயும் சரி தன்னை நம்ப மறுப்பதாகக் கூறி ஐஸ்வர்யா மிகுந்த மன உளைச்சலுடன் பேசியதுடன், வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், “நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்” என்று ஆவேசமாகக் கூறியதுடன், ஐஸ்வர்யாவைத் தனது கையால் ஓங்கித் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஐஸ்வர்யா, அருகிலிருந்த விடுதி அறையின் ஜன்னல் வழியாகத் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஐஸ்வர்யாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கங்கம்மனகுடி காவல்துறையினர், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு சந்தோஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in