LATEST NEWS
“முதல்வர் விஜய் உருவாக்கிய மோசமான முன்னுதாரணங்களே இதற்கு காரணம்..” மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எல்லை மீறி நடந்து கொண்டதற்கு, முதலமைச்சர் விஜய் உருவாக்கியுள்ள மோசமான முன்னுதாரணங்களே காரணம் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியினர் எத்தகைய தவறுகளைச் செய்தாலும் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற எண்ணம் உருவாகியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் அளிக்கும் பெண்களையே கட்சியிலிருந்து நீக்கும் போக்கை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் தவறு செய்பவர்களுக்குத் துணிச்சலைக் கொடுக்கும் வகையில் அமைந்துவிட்டதாகவும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அந்தத் தைரியத்தின் விளைவாகவே, ஒட்டுமொத்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரியிடமே தவெக எம்.எல்.ஏ எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இத்தகைய மோசமான முன்னுதாரணங்கள் நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்றும் சாடியுள்ளார்.
