LATEST NEWS
“உங்க அண்ணன், தாய்மாமன்னு… டயலாக் பேசும் முதல்வருக்கு இது தெரியுமா, தெரியாதா..?” திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
“உங்க அண்ணன், உங்க தாய்மாமன்” எனப் பேசி வரும் முதலமைச்சரிடம், நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் ஒருவர் புகார் அளித்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பிறகே ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதிவாகும் நிலை இருந்தால், தமிழ்நாட்டில் நடப்பது முறையான ஆட்சியா அல்லது வேறு ஏதேனுமா என்றும் அவர் வினவியுள்ளார்.
‘த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்’ என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அந்தக் கட்சியினரின் தொல்லையிலிருந்து தப்பிக்கப் பெண்கள் பாதுகாப்பு தேடி ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
