LATEST NEWS
“என் மகள் செத்திருந்தால் யார் பொறுப்பு..?” பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை விட்டுவிட்டு மருத்துவர்களை செய்த பகீர் காரியம்.. நடைபாதையில் பிரசவம் நடந்த அவலத்தால் தந்தை ஆவேசம்..!!
பாரான்கா மருத்துவமனையின் நடைபாதையிலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணுக்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனையின் பொது நடைபாதையிலேயே அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில், பணியில் இருக்க வேண்டிய பெண் மகப்பேறு மருத்துவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளனர். உயிருக்குப் போராடும் அவசர நிலையிலிருந்த கர்ப்பிணியைக் கவனிக்காமல், மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டது மருத்துவமனை நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மருத்துவர்களின் இந்த அலட்சியத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் தந்தை, மருத்துவமனை வளாகத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “ஒருவேளை என் மகள் உயிரிழந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு? மகப்பேறு மருத்துவர் எங்கே போனார்?” என அவர் கண்ணீருடனும், கோபத்துடனும் கேள்வி எழுப்பியது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதோடு, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
