CRIME
“காதல் கணவர் இல்லாமல் வாழ முடியவில்லை…” இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் 8 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் காமேபள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட லாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஷேக் ராஜன்பீ (29). இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அக்பர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு நிசாருதீன் (8), நஹீம் (6) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்பர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது பேரிடியாக அமைந்தது.
கணவரின் மறைவுக்குப் பிறகு ராஜன்பீ மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் இல்லாமல் தனிமையில் வாழ முடியாமல் தவித்து வந்த அவர், தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி, நச்சுப் பொருளைத் தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் உட்கொண்டுள்ளார்.
இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தாய் ராஜன்பீயும், இளைய மகன் நஹீமும் பரிதாபமாக உயிரிழந்தனர். மூத்த மகன் நிசாருதீன் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
