“வரதட்சணையாக புல்லட் பைக் இல்லையா..?” திருமண மேடையிலேயே மணமகளை அறைந்த மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் கொடுத்த மரண அடி.. காவல் நிலையத்தில் வெடித்த வாக்குவாதம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வரதட்சணையாக புல்லட் பைக் இல்லையா..?” திருமண மேடையிலேயே மணமகளை அறைந்த மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் கொடுத்த மரண அடி.. காவல் நிலையத்தில் வெடித்த வாக்குவாதம்..!!

Published

on

ஹத்ராஸ் மாவட்டத்தின் சஹாபாத் பகுதியில் உள்ள நக்லா தாசி கிராமத்தில் திருமண வைபவம் விமரிசையாக நடைபெற்று வந்தது. மணமக்களுக்கு இடையே மாலை மாற்றும் சடங்கு இனிதே முடிந்த நிலையில், மணமகன் திடீரென வரதட்சணையாக புல்லட் மோட்டார் சைக்கிள் வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்துள்ளார். உடனடியாக புல்லட் பைக் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த மணமகன், திருமண மண்டபத்திலேயே கடும் ரகளையில் ஈடுபட்டு, மணமகளையும் அவரது தந்தையையும் கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார், இத்தகைய நபருடன் திருமணம் வேண்டாம் எனக் கூறித் திருமணத்தை அதிரடியாக நிறுத்தினர். இதற்கிடையே, மணமகன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் மணமகள் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்ற நிலையில், அங்கேயும் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் திருமணம் ரத்து செய்யப்பட்டதால், மணமகள் இல்லாமலேயே மணமகன் வீட்டார் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in