“மது குடிக்க வர்றீங்களா..? முதல்ல ரத்தப் பரிசோதனை பண்ணுங்க..” கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் குடிமகன்கள் ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மது குடிக்க வர்றீங்களா..? முதல்ல ரத்தப் பரிசோதனை பண்ணுங்க..” கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் குடிமகன்கள் ஷாக்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள தியோரி மற்றும் பண்டா பகுதிகளில் சமீபத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் அருந்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்களில் பலருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் தீவிரமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுப்பிரியர்களின் உடல்நிலையைக் கண்காணித்து அவர்களை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்கும் வகையில் மாவட்ட கலெக்டர் திலீப் குமார் யாதவ் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்; இதற்காக மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பே தினமும் மது அருந்த வரும் நபர்களின் பட்டியல், கடை நடத்துபவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் கலால்துறையைச் சேர்ந்த மருத்துவக் குழுக்கள் மதுக்கடைகளுக்கு வெளியே முகாமிட்டு, மது அருந்த வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றன. இந்த முகாமின் முதல் 2 நாட்களில் மட்டும் 147 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களில் 144 பேரிடம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கண்டறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் பலவீனமானவர்களுக்கு வைட்டமின் பி1 மாத்திரைகள், மல்டி வைட்டமின் மருந்துகள் மற்றும் தேவையானவர்களுக்கு குளுக்கோஸ் வழங்கப்படுகிறது.

Advertisement

இந்த நடவடிக்கை மதுபான விற்பனையைத் தடுப்பதற்கோ யாரையும் கட்டாயப்படுத்துவதற்கோ அல்ல என்றும், முற்றிலும் தன்னார்வ அடிப்படையில் மக்களுக்கு உடல்நிலை விழிப்புணர்வு ஏற்படுத்தி மதுப்பழக்கத்தைக் கைவிட ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்றும் மாவட்ட கலெக்டர் திலீப் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளுக்கு வெளியே மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்குப் பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in