“ஓஹோ.. முதல்வர் கிறிஸ்தவர் என்பதால்தான் இந்துக்களுக்கு.. ” தஞ்சாவூரில் நயினார் நாகேந்திரன் வீசிய திடீர் அணுகுண்டு.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் வெடித்த சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஓஹோ.. முதல்வர் கிறிஸ்தவர் என்பதால்தான் இந்துக்களுக்கு.. ” தஞ்சாவூரில் நயினார் நாகேந்திரன் வீசிய திடீர் அணுகுண்டு.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் வெடித்த சர்ச்சை..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்துக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் ஏன் தமிழக அரசால் அங்கு தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். மேலும், “தீபம் ஏற்றவில்லை என்றால் முதலமைச்சர் விஜய்யை கிறிஸ்தவராகத்தான் பார்க்க முடியும்; கிறிஸ்தவர் என்பதால் அவர் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறாரா? இது குறித்து முதலமைச்சர் மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என அவர் கடுமையாகச் சாடினார்.

Advertisement

அத்துடன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் வரை, பாரதிய ஜனதா கட்சியினர் ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தீபம் ஏற்றிப் பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தமிழக அரசு அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜகவினர், மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in