“அதிமுக தலைமை போட்ட ‘அந்த’ ஒரு உத்தரவு…” அடுத்த நொடியே வெடித்த உட்கட்சி பூகம்பம்.. கோவை சத்யனை ஆக்ரோஷமாக பொளந்து கட்டிய காயத்ரி ரகுராம்.. உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதிமுக தலைமை போட்ட ‘அந்த’ ஒரு உத்தரவு…” அடுத்த நொடியே வெடித்த உட்கட்சி பூகம்பம்.. கோவை சத்யனை ஆக்ரோஷமாக பொளந்து கட்டிய காயத்ரி ரகுராம்.. உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

அதிமுக தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்துத் தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேட்டி அளிக்கவோ அறிக்கை வெளியிடவோ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் பகிர்ந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், தலைமையின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

கோவை சத்யனின் இந்தப் பதிவிற்குக் கடுமையான எதிர்வினையாற்றிய காயத்ரி ரகுராம், “இதுதான் உங்கள் வேலையா கோவை சத்யன்? த.வெ.க.-வில் இணைய விரும்பிய ஒரு குழுவுடன் பாதியிலேயே வெளியேறியதாகக் கூறப்படுவது நீங்கள்தானே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தனது சொந்த பாதுகாப்பின்மையை தலைமை மீது திணித்து, வேறு யாருக்கும் முக்கியத்துவம் கிடைத்துவிடுமோ எனக் கவலைப்படும் விஷம் கக்கும் குணம் கொண்டவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வைப்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

அரசியல் என்பது மக்களுக்குச் சேவையாற்றுவதே தவிர, தனிப்பட்ட கவனத்திற்காகப் போட்டிபோடுவது அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள காயத்ரி ரகுராம், மக்களின் சார்பாகக் கேள்விகளை எழுப்பவும், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசவும் யாருடைய அனுமதியும் தேவையில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது ஒரு ஜனநாயக நாடு என்றும், ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த அரசியல்சாசன உரிமை இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியைப் பாதுகாப்பது போல நடித்து, அவரைப் பலவீனமானவராகவும் தன்னம்பிக்கையற்றவராகவும் சித்தரித்து அவரது தலைமைத்துவத்தைச் சீர்குலைக்கும் நபர்களின் உள்நோக்கத்தை அவர் புரிந்துகொள்வார் என நம்புவதாகக் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். உண்மையான விசுவாசம் என்பது தலைமையை வலுப்படுத்துவதே தவிர, அதற்கு ஆதரவாக நிற்பவர்களை அமைதியாக்குவது அல்ல எனக் கூறித் தனது பதிவில் அவர் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in