CRIME
“வா பாப்பா குர்குரே வாங்கி தாரேன்..” 7 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை முயற்சி.. சத்தமிட்டதால் கொடூரனின் வெறிச்செயல்.. காட்டுக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் ரோபரில், 10 ரூபாய் குர்குரே பாக்கெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 7 வயது சிறுமியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர், சிறுமி சத்தமிட்டதால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 7 வயது சிறுமி ஒருவர், பஞ்சாபின் ரோபர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு 2-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குமார் என்ற நபர், அந்தச் சிறுமிக்கு 10 ரூபாய் குர்குரே தின்பண்டப் பாக்கெட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய அவர் முயற்சித்துள்ளார்.
அப்போது அச்சிறுமி அலறிச் சத்தமிட்டதோடு, வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்தினரிடம் நடந்ததைச் சொல்லிவிடுவேன் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் குமார், சிறுமியின் வாயையும் கழுத்தையும் அழுத்திப் பிடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமியைக் காணாமல் தவித்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திச் சிறுமியின் சடலத்தை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளி அஜய் குமாரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 10 ரூபாய் தின்பண்டத்திற்கு ஆசை காட்டி 7 வயது பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
