BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! இனி தந்தையர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! இனி தந்தையர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

Published

on

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு, ஆண் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட ஆண் அரசுப் பணியாளர்கள் தங்களுக்குக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள்ளாகவோ இந்த 15 நாள் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் சேயைப் பராமரிக்கும் முக்கியமான காலகட்டத்தில் தந்தையர்களும் உடனிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

பணிச்சுமைக்கு இடையே குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாகக் கையாள இந்தப் புதிய விடுப்பு முறை ஆண் ஊழியர்களுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த மனிதநேயமிக்க முடிவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in