LATEST NEWS
“கடைசி 6 பந்துகளிலும் சிக்சர் தான்” நான் பொதுவேட்பாளரா..? யார் சொன்னது..? திமுகவா? அதிமுகவா..? அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் டுவிஸ்ட் வைத்த சீமான்…!!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்குச் சீமான் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். “அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் பொது வேட்பாளர் என யார் சொன்னது? திமுக சொன்னதா? அதிமுக சொன்னதா? அல்லது நான் தான் சொன்னேனா?” என அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சீமான், தனது தனித்துப் போட்டியிடும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தோற்றாலும் தோற்பேனே தவிர, யாருடனும் கூட்டணி வைக்கவோ அல்லது யாரிடமும் ஆதரவு கேட்கவோ மாட்டேன் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தன்னைப் பொது வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என்று மற்றவர்கள் அஞ்சி அலறுவதாகவும் சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும், தேர்தல் களத்தைக் கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “கடைசி 6 பந்துகள் தான் இருக்கின்றன; அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக விளாசி வெற்றி பெற வேண்டும்” எனத் தனது தொண்டர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, இடைத்தேர்தல் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
