LATEST NEWS
“யாரும் தப்ப முடியாது..” நள்ளிரவில் பாய்ந்த வான்வெளி தாக்குதல்… 80 பேரை சாய்த்ததாக இஸ்ரேல் பிரதமர் அதிரடி எச்சரிக்கை..!!
காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மந்திரி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். காசா முனையின் மத்திய பகுதியில் உள்ள டெயிர் அல்-பலா நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அடுக்குமாடி குடியிருப்பு தாக்கப்பட்டதில் ஹமாஸ் அமைப்பின் துணை கல்வி மந்திரி காலித் அபு நடா மற்றும் அவரது மனைவி உயிரிழந்துள்ளனர்; மேலும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைகள் மூலம் பணயக் கைதிகளில் சிலர் உயிருடனும், உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இத்தகைய சூழலில், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி ஹமாஸ் அமைப்பின் மீது சர்வதேச சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கடந்த மாதத்தில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 80 பேரை இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு பயங்கரவாதியும் வலிமை படைத்தவராக இருக்க முடியாது என்றும், ஹமாஸ் தலைமைத்துவத்தில் உள்ள எவரும் தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
