LATEST NEWS
அம்மாடியோ.. 30 அடி உயர மின்கம்பத்தில் உயிருக்கு போராடிய ஊழியர்… அடுத்த நொடியே மேலே ஏறிய நண்பர்கள் செய்த நெகிழ்ச்சிச் செயல்.. திக் திக் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில், மின்கம்பத்தில் ஏறிப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த தனியார் மின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த நிலையில், சக ஊழியர்கள் உடனடியாக மின்கம்பத்தின் மீதே ஏறி அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தின் கம்பதூர் மண்டல மையத்தில் வியாழக்கிழமை தனியார் மின் ஊழியரான ராஜு என்பவர் மின்கம்பத்தில் ஏறிப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ராஜு, மின்கம்பத்தின் மேலேயே மயங்கிய நிலையில் சிக்கிக்கொண்டார். இதனைக் கண்ட சக ஊழியர்களும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்து, துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக மின் விநியோகத்தைத் துண்டித்தனர்.
தொடர்ந்து, சற்றும் தாமதிக்காமல் சக ஊழியர்கள் மின்கம்பத்தின் உச்சிக்கு ஏறி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜுவுக்கு அங்கேயே முதலுதவி அளித்து அவரது இதயத் துடிப்பை மீட்டுக் காப்பாற்றினர். பின்னர், சுயநினைவு திரும்பிய ராஜுவைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்; உரிய நேரத்தில் சக ஊழியர்கள் காட்டிய சாமர்த்தியத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டதை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
