இன்ஸ்டா காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ அக்ரிமென்ட் போட்ட மனைவி… ஆனால் கடைசியில் கணவர் வைத்த செம ட்விஸ்ட்.. பரபரப்புச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

இன்ஸ்டா காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ அக்ரிமென்ட் போட்ட மனைவி… ஆனால் கடைசியில் கணவர் வைத்த செம ட்விஸ்ட்.. பரபரப்புச் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழத் தொடங்கியுள்ள நிலையில், தனது கணவர் விவாகரத்து தர மறுப்பதால் சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த ரோஷ்னி ராகவ் என்பவருக்கும் ராஜீவ் ராகவ் என்பவருக்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த ரோஷ்னிக்கு, மொராதாபாத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுக் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, தனது கணவரை விட்டுப் பிரிந்த ரோஷ்னி, காதலன் அமித் குமாருடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழத் தொடங்கியதோடு, அதற்காக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளார்.

Advertisement

இதற்கிடையே, தனது கணவர் ராஜீவ் மது அருந்திவிட்டுத் தன்னைத் தாக்கித் துன்புறுத்தியதாக ரோஷ்னி குற்றம் சாட்டியுள்ளார்; ஆனால், ரோஷ்னிக்கு விவாகரத்து வழங்க அவரது கணவர் ராஜீவ் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு பெண் விரும்புவதால் மட்டுமே சட்டப்பூர்வமான திருமணம் முடிவுக்கு வந்துவிடுமா அல்லது திருமணத்தை ரத்து செய்யக் கணவரின் சம்மதமும் நீதிமன்றத்தின் முறையான விவாகரத்து நடைமுறைகளும் அவசியமா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in