CINEMA
“இவனையெல்லாம் ஏன் கல்யாணம் பண்ணுன?” – மனைவிக்குப் போன் செய்து அதிர்ச்சி கொடுத்த கணவரின் முன்னாள் காதலி..’தமிழா தமிழா’ மேடையில் வெடித்த முன்னாள் காதல் விவகாரம்…!!
மக்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் உணர்வுபூர்வமான சிக்கல்களை மையமாகக் கொண்டு ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சியில், இந்த வாரம் கணவரின் முன்னாள் காதல் குறித்து அறிந்த மனைவிகள் மற்றும் கணவர்கள் இடையிலான அனுபவங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் பங்கேற்ற பெண் ஒருவர், தனது கணவரின் முதல் காதலி தனக்குத் தொலைபேசியில் அழைத்து, “இவனெல்லாம் ஒரு ஆளுனு ஏன்ம்மா கல்யாணம் பண்ணுன?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பிய சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு மனைவி, தனது கணவரின் சமூக வலைத்தளக் கணக்குகளில் அவருடைய முன்னாள் காதலியின் திருமணம், வளைகாப்பு மற்றும் குழந்தை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தார். திருமணத்திற்குப் பிறகும் அவற்றை ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கணவர் எந்தத் தயக்கமும் இன்றி அவற்றை அழிக்க மாட்டேன் என்றும், தனக்குப் பார்க்கத் தோன்றும் போதெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்றும் பதிலளித்துள்ளார்.
கணவரின் இந்தப் பதிலால் சற்றும் சளைக்காத அந்த மனைவி, “நானும் இதேபோல் என்னுடைய பழைய காதலனின் புகைப்படங்களையும் தகவல்களையும் எடுத்துப் பார்த்தால் நீங்கள் சும்மா விட்டுவிடுவீர்களா?” என்று நறுக்கென்று ஒரு கேள்வியை எழுப்பினார். மனைவியின் இந்த எதிர்பாராத மற்றும் நேர்மையான பதிலடியைக் கேட்ட கணவர், பதிலளிக்க முடியாமல் திகைத்துப் போனதுடன் அவருடைய முகபாவனையும் மொத்தமாக மாறியது நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
