CRIME
பெற்றோர்களே உஷார்.. பிரபல கடையில் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்ட சிறுமி… அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்..!!
இலங்கையின் வெலிமடை பகுதியில் உள்ள பிரபல ‘பிங்ஸு’ ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்ட சிறுமி ஒருவருக்குத் திடீரென உதடு வீங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெலிமடை நகரில் இயங்கி வரும் ‘Bingxue’ விற்பனை நிலையத்தில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்ட சிறுமி ஒருவருக்கு, சிறிது நேரத்திலேயே உதடுகளில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு உடல்நலக் குறைவு உண்டானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் அப்பகுதியிலும் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் கவலைகளும் எழுந்துள்ளன.
குறிப்பாக, குழந்தைகள் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம், காலாவதி தேதி மற்றும் சுகாதார நிலை குறித்துச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு வெளியில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
