“எமன் போல் அதிவேகமாக வந்த டிராக்டர்…” சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கர்.. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எமன் போல் அதிவேகமாக வந்த டிராக்டர்…” சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கர்.. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கோர விபத்தில், பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதாயூன் மாவட்டத்தின் சஹஸ்வான் நகரில் உள்ள கச்லா சந்திப்புப் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, எதிரே அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இந்தப் பயங்கர மோதலில் இருசக்கர வாகனத்திலிருந்த இரண்டு இளைஞர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.

Advertisement

படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, விபத்தை ஏற்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in