“ஆசைப்பட்டு கரும்பு ஒடித்தது ஒரு குத்தமா..?” விவசாயி துரத்தியதில் ஓடிய சிறுவர்கள்.. 2 நாட்களுக்குப் பின் குளத்தில் மிதந்த சடலம்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆசைப்பட்டு கரும்பு ஒடித்தது ஒரு குத்தமா..?” விவசாயி துரத்தியதில் ஓடிய சிறுவர்கள்.. 2 நாட்களுக்குப் பின் குளத்தில் மிதந்த சடலம்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் பயிலும் ஐந்து சிறுவர்கள், தங்கள் மதரஸாவிற்காகக் கிராமத்தில் நன்கொடை வசூலிக்கச் சென்றுள்ளனர். அப்போது வழியில் இருந்த கரும்புத் தோட்டத்தைப் பார்த்த சிறுவர்கள், ஆசையில் சில கரும்புகளை ஒடித்துச் சாப்பிட முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த தோட்டத்து விவசாயி சிறுவர்களைத் துரத்தியதாகக் கூறப்படுகிறது.

விவசாயி துரத்தியதில் பயந்து ஓடிய சிறுவர்களில் மூன்று பேர் பத்திரமாக மதரஸாவிற்குத் திரும்பி விட்டனர். ஆனால், உடன் சென்ற மற்ற இரண்டு சிறுவர்கள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், இது குறித்து மதரஸா நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாயமான சிறுவர்களைத் தேடும் பணி தீவிரமாகத் தொடங்கப்பட்டது.

Advertisement

இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மாயமான சிறுவர்களில் ஒருவரான முகமது ஜைத் அலி என்பவரின் உடல் அப்பகுதியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாயமான மற்றொரு சிறுவனான அஷ்ரப் அலியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in