LATEST NEWS
“அடச்சீ.. இதெல்லாம் தேவையா..?” 15 வயசு பையன் கூட 26 வயசு டீச்சருக்கு இப்படியொரு ஆசையா..? ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 26 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், தான் பணிபுரிந்து வந்த பள்ளியின் தாளாளர் மகனுடன் ஓடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11-ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவருடன் அவர் சென்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அருகே உள்ள ஒரு ஹோட்டல் அறையில் இருந்த இருவரையும் போலீசார் கண்டறிந்து பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மாணவர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியரைக் கைது செய்துள்ள போலீசார், இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
