LATEST NEWS
“இது நிர்வாகத் திமிர்.. இனி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது..!” சுப்ரீம் கோர்ட்டில் மத்திய தொல்லியல்துறை வைத்த செம ட்விஸ்ட்.. தமிழக அரசுக்கு வந்த புது சிக்கல்..!!
உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இது குறித்து இன்று நடைபெற்ற விசாரணையில், தீபம் ஏற்றாதது வெறும் நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, அது ஒரு “நிர்வாகத் திமிர்” என்று மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றப் போவதில்லை என்ற மனநிலையுடன் கோவில் அறங்காவலர் குழு செயல்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் ஆலோசிக்க வேண்டிய தொல்லியல் துறை அதிகாரிகளைக் கூட காவல்துறை தடுத்து நிறுத்தி ஆய்விற்கு அனுமதி மறுத்ததாகவும் வாதிடப்பட்டது.
தற்போதைய கோவில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தடையாக இருப்பதால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சுதந்திரமான கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய இடமான உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்றிவிட்டு, உச்சநீதிமன்றம் அனுமதித்த மலை உச்சி கல்தூணில் தீபம் ஏற்றாதது சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட சவால் எனத் தொல்லியல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய அந்தக் கல்தூணில் மீண்டும் தீபம் ஏற்றுவதை உச்சநீதிமன்றம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
