LATEST NEWS
“உண்மையான கண்ணீரா? அல்லது முதலைக் கண்ணீரா?” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறையை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்..!!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, சம்பவத்தின்போது காவல்துறையினர் செயல்பட்ட விதம் குறித்து நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், காவல்துறை தரப்பிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
குறிப்பாக, காவல்துறையின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா அல்லது முதலைக் கண்ணீரா?” என மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இவ்வழக்கை நீதிமன்றம் மிக விரிவாக விசாரிக்க உள்ளதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் இந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மதுரை காவல் ஆணையர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, மொத்தம் 5,797 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
