CRIME
அய்யோ..! “4 வருஷமா உயிருக்கு உயிரா காதலிச்சிட்டு இப்படியா பண்றது..?” நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. லாட்ஜ் அறையில் நடந்தது என்ன..?!
கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான கங்கா, நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அதேபோல் பி.எஸ்சி நர்சிங் முடித்துவிட்டு, மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை ஆலோசகராகப் பணியாற்றி வந்த கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணா (23) என்பவரை கங்கா கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேலை தேடுவதற்காக பெங்களூருவிற்குச் சென்று, காட்டன்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓ.டி.சி சாலையில் உள்ள ‘ரீஜென்சி’ தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) காலை 10 மணியளவில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், கோகுல் கிருஷ்ணா மறைத்து வைத்திருந்த கத்தியால் கங்காவை சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு கோகுல் கிருஷ்ணாவே விடுதி ஊழியர்களிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காட்டன்பேட்டை போலீசார், கோகுல் கிருஷ்ணாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் முன்கூட்டியே கத்தியை வாங்கி வைத்திருந்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கும் நிலையில், கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
