“முன்பு எதிர்ப்பு.. இப்போது ஆதரவு” தொகுதி மறுவரையறை மசோதாவிற்காக அமித் ஷாவுடன் கைகோர்க்கிறதா திமுக..? – தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முன்பு எதிர்ப்பு.. இப்போது ஆதரவு” தொகுதி மறுவரையறை மசோதாவிற்காக அமித் ஷாவுடன் கைகோர்க்கிறதா திமுக..? – தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், அதில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். மாநிலங்கள் முழுவதும் மக்களவை இடங்களை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 16 அன்று மக்களவை இடங்களை 543-லிருந்து 850 ஆக உயர்த்தவும், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, போதிய பெரும்பான்மை கிடைக்காததால் திரும்பப் பெறப்பட்டது என்றும், அப்போது தமிழக நலனைப் பாதிப்பதாகக் கூறி திமுக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்டுகிறதஹு. ஆனால், தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மசோதாவிற்குத் தமிழகத்தில் தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. தற்போது திமுகவும் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்து, அக்கட்சியின் மூத்த எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in