“யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது… பாஜக தெளிவுபடுத்திய பிறகே ஆதரவு..” தொகுதி மறுவரையறை குறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது… பாஜக தெளிவுபடுத்திய பிறகே ஆதரவு..” தொகுதி மறுவரையறை குறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் நமக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையாது என்றும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எடுத்தால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்தார்.

இதையெல்லாம் பாஜக தெளிவுபடுத்தி, பல அரசியல் கட்சிகளுக்குப் புரிய வைத்து, அதற்குப் பிறகு அவர்கள் வைத்த கோரிக்கை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும், 25 வருடத்திற்கு இது தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

Advertisement

அதனால்தான் தற்போது திமுக மட்டுமல்லாமல் இந்தியாவில் பல கட்சிகள் ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கின்றன என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும், மொத்த நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இல்லையென்றால் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்து போய் தமிழ்நாட்டிற்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in