LATEST NEWS
அஜித் நடித்த வலிமை திரைப்படம் OTT தளத்தில் வெளியாகப் போகிறதா??
அஜித் நடித்த வலிமை திரைப்படம் OTT தளத்தில் வெளியாகப் போகிறதா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! போனி கபூர் தயாரிப்பில் அஜித் மற்றும் இயக்குனர் வினோத் மீண்டும் இணைந்த திரைப்படம் வலிமை இவர்கள் ஏற்கனவே போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர் அது அமிதாப்பச்சன் நடித்த இந்திப் படத்தின் ரீமேக் என்பதால் சொந்த கதையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் இதனால் மீண்டும் அதே கூட்டணியில் வலிமை என்ற திரைப்படத்தை தற்போது உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஓமெகிரான் பரவல் காரணமாக வலிமை திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் தற்பொழுது பரவல் அதிகமாகி வரும் நிலையில் பத்தாம் தேதிக்கு மேல் தியேட்டர்கள் மூடும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள OTT தளங்கள் போனி கபூரிடம் டீலிங் பேசி வருகிறார்களாம். ஆனால் அஜித் தன் படத்தை சிறிய டிவி அல்லது கம்ப்யூட்டர் மொபைல்களிலும் பார்க்க கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார் என்று அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் போனி கபூர் மாஸ்டர் தயாரிப்பாளர் போல் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்ற நிலையில் டீலிங் பேசிய தொகையை பெரிய தொகை என கூறப்படுகிறது எனவே எப்படி வேண்டுமானாலும் வலிமை திரைப்படம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது.
