LATEST NEWS
நான் தான் உனக்கு பாடிகார்டு….! குழந்தையை பாதுகாக்கும் புத்திசாலி பூனை…. வைரலாகும் வீடியோ….!!!!
குழந்தை ஒன்று மொட்டை மாடியில் கம்பியை தாண்ட நினைக்கும் போது அதை பார்த்துக் கொண்டிருந்த பூனை அந்த குழந்தையை மேலே ஏறவிடாமல் தடுக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையதளத்தில் குழந்தைகள் சுட்டித்தனமாக பல விஷயங்களை செய்கின்றது. இது தொடர்பான வீடியோ தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
https://twitter.com/Gabriele_Corno/status/1576474359316860930
அவர்களின் வீடியோக்களை நாம் பார்க்கும் போது நமக்கு ஒரு வித புன்னகை ஏற்படுகின்றது. அந்த வகையில் குழந்தையை பாதுகாக்கும் பூனையின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது. மாடியில் உள்ள தடுப்புகளை மீறி அதன் மீது ஏற முயன்ற குழந்தையை அந்த பூனை தடுக்கின்றது. இது போன்ற அன்பும் அரவணைப்பும் நிறைந்த வீட்டு செல்லப்பாணிகள் கிடைப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.
செல்லப்பிராணிகள் என்பது வளர்ப்பதற்கு மட்டுமல்ல இது போன்ற தேவைகளுக்கும் நிச்சயம் அவசியம். குழந்தைகள் வெளியே செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த பூனை அந்த குழந்தையின் மீது மிகவும் அதிக அக்கறையுடனும் பாசம் இடமும் நடந்து கொள்கின்றது. ஒரு தாயைப் போல அரவணைக்கும் அந்த பூனை பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
