LATEST NEWS
பார் செட்டப்புடன் புது வீடு கட்டிய பிரபல வில்லி நடிகை….! இது என்னுடைய பல நாள் கனவு….. வைரல் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் பிரியா தனது புது வீட்டில் சிறியதாக பார் கட்டி வைத்துள்ளார். இதனை சோசியல் மீடியாவில் அவர் பதிவிட அது வைரலாகி வருகின்றது. சின்னத்திரை சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பிரின்சஸ் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான emi என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.
இவர் அதன் பிறகு பல சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சில சேனல்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதி ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ஆக்டிங்கள் பிசியாக இருக்கும் ப்ரியா எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார் தான் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் தனது வீட்டில் பார் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தனக்கு இப்படி ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது பல நாள் கனவு அது தற்போது நினைவாகியுள்ளது ,என்று கூறி புது வீட்டை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருந்தார். அதில் ஒரு பார் செட்டப்பும் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
