“தம்பி.. குப்பையை அங்க போடாதே…” ரோட்ல குப்பையை போட்ட உடனே மைக்கில் கூப்பிட்டுக் கண்டிக்கும் நவீன கேமரா! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தம்பி.. குப்பையை அங்க போடாதே…” ரோட்ல குப்பையை போட்ட உடனே மைக்கில் கூப்பிட்டுக் கண்டிக்கும் நவீன கேமரா! வைரல் வீடியோ..!!

Published

on

மும்பையில் சாலை ஓரங்களில் குப்பைகளை வீசிவிட்டுச் செல்வது இனி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நகரத்தை சுத்தமாக வைத்திருக்கப் பெருநகர மும்பை மாநகராட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியை நாடத் தொடங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை அடையாளம் கண்டு உடனடியாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யும் புதிய ஸ்மார்ட் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குப்பைகளை வீசிவிட்டுச் அமைதியாகத் தப்பிச் செல்லும் வழக்கத்திற்குத் தொழில்நுட்பத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சி குறித்த தகவலை BMC தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளது. மும்பையின் ஜி-தெற்கு வார்டுக்குட்பட்ட மாஹிம் பகுதியில் உள்ள டாக்டர் ராய்கர் சாலையில் அமைந்துள்ள கஜானன் வாடிகா என்ற இடத்தில் இந்த நவீன தொழில்நுட்பம் தற்போது நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடிக்கடி குப்பை வீசிச் செல்லும் இப்பகுதிகளை மாநகராட்சி ‘குப்பைக்கு ஆளான பகுதிகள்’ என்று அழைக்கிறது. இந்த அமைப்பின் சிறப்பம்சமென்னவென்றால், கேமரா கண்காணிப்போடு மட்டும் நின்றுவிடாமல், ஒருவர் குப்பை வீசப் முயல்வதை உணர்ந்த உடனேயே ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைச் செய்தியை ஒலிக்கச் செய்து, அப்பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க மக்களை வலியுறுத்துகிறது.

Advertisement

சமூக வலைத்தளங்களில் இந்த புதிய முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இருப்பினும் சிலர் இதனை நகைச்சுவையான முறையில் அணுகி, அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்ற யோசனைகளையும் முன்வைத்துள்ளனர். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மும்பையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற AI கேமராக்களை விரிவுபடுத்த பிஎம்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குப்பைத்தொல்லையால் அவதிப்படும் பல பொது இடங்களின் துப்புரவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in