LATEST NEWS
“19 வருட போராட்டம்”…. ஆடை இன்றி நிர்வாணமாக நடித்த விஜய் டிவி பிரபலம்…. எந்த படம் தெரியுமா….????
சின்னத்திரையில் பிரபலமாகி வெகுவாக ரசிகர்களை கவர்ந்த பிரபலம் தான் நடிகர் பிரஜின் பத்மநாபன். இவர் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கிய இவர், ஜீவா நடித்த டிஸ்யூம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் மணல் நகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் மலையாளத் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரஜின் தற்போது D3 என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கதையின் தேவைக்காக ஆடை இன்றி நிர்வாணமாக நடித்ததாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 19 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் நான் எனக்கான இடத்தை இன்னும் பிடிக்கவில்லை. இந்த இடத்தை நான் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் பெற்று கொடுக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
