அஜித்தை பின்தொடர்ந்த ரசிகர்கள்…. பதறிப்போய் காரை விட்டு இறங்கிய அஜித்…. நெகிழ வைத்த சம்பவம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அஜித்தை பின்தொடர்ந்த ரசிகர்கள்…. பதறிப்போய் காரை விட்டு இறங்கிய அஜித்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் தற்போது சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நிலையில் அஜித்தை காண பல ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூடினர். அதன் பிறகு அஜித் வீட்டிற்கு செல்லும் போது பைக்கில் அவரை பின்தொடர்ந்து உள்ளனர். இதையெல்லாம் பார்த்த அஜித் ரசிகர்களை அழைத்தார்.

Advertisement

உடனே அஜித்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலாக சென்ற நிலையில் அப்போது அஜீத் இவ்வாறு சுவரின் மீது ஏறி பைக்கில் பின் தொடர்ந்து என்னை பார்க்க வர வேண்டாம். ஏதாவது விபத்து நடந்தால் அனைவருக்கும் அது கஷ்டமாகும். எனவே பாதுகாப்பாக இருங்கள் என்று அவர்களின் தோளில் கை வைத்து அட்வைஸ் செய்தார். இதனைக் கண்டு அஜித் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in