LATEST NEWS
செல்ல மகளின் 11 வது பிறந்தநாள்…. அந்த மாதிரி செல்பி எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராய்…. வைரல் புகைப்படம்(உள்ளே )…..!!!!
உலக அழகியாக கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்வாகி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஆரத்யா பச்சன் என்ற மகளைப் பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார்.
சில நாட்கள் கழித்து சினிமாவில் மீண்டும் களம் இறங்கினார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நந்தினி கதாபாத்திரம் தனது கனவு வேடம் என்று நடிகை மீனாவும் கூறி இருந்தார்.தமிழர்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார்.
இந்நிலையில் தனது ஒரே மகளான ஆரத்யாவின் 11 வது பிறந்த நாளை நேற்று ஐஸ்வர்யா ராய் கொண்டாடினார். தனது மகளுக்கு உதட்டில் ஆசையாக முத்தம் கொடுத்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
