LATEST NEWS
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்ஸி…. மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் போட்டியாளர்கள் டாஸ்க் நடக்கும் போது அதில் கவனம் செலுத்துவதை விட சண்டை போடுவதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனை கமல்ஹாசனும் கடுமையாக கண்டித்தார். தற்போது போட்டியாளர்கள் ஓரளவு நன்றாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். அந்த 14 போட்டியாளர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அவ்வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு குயின்சி வெளியேறியுள்ளார். இது குறித்த தகவல் முன்னதாகவே வெளியான நிலையில் தற்போது அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறி உள்ள அவருக்கு ஒரு வாரத்திற்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
