LATEST NEWS
அட செம க்யூட்டா இருக்காங்களே…. காதலியை அறிமுகம் செய்து வைத்த தெருக்குரல் அறிவு…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் பிரபல பாடவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகர் தெருக்குரல் அறிவு. இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்ஜாய் என்ஜாமி என்ற ஆல்பம் பாடல் மூலம் தான். இந்தப் பாட்டு சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சைக்காக அதிகம் பேசப்பட்டார் இவர். அதாவது என்ஜாய் என்ஜாமி பாடல் சர்ச்சை தான் எழுந்தது.
அந்தப் பாடல் பற்றிய பல விஷயங்களில் அவர் ஒதுக்கப்பட்டதாகவும் சந்தோஷ் நாராயணன் மற்றும் மகள் தீ தான் என்ஜாய் என் சாமி பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவதாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. இரு தரப்பினரும் மாறி மாறி இந்த விவகாரம் பற்றி பல அறிக்கைகளை வெளியிட்டது சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியார் நிகழ்ச்சியில் அந்த பாடலை பாடுவதற்கு தீ மட்டுமே வருகை தந்த நிலையில் தெருக்குரல் அறிவு அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்பதும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் சர்ச்சை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அறிவு தனது காதலியை தற்போது அறிமுகம் செய்துள்ளார். இவரின் காதலி கல்பனா பா. ரஞ்சித்தின் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார்.”For miles together.. We are the wildest love of our ancestors.. கல்பனா – என் திமிரான தமிழச்சி” என அறிவு குறிப்பிட்டு இருக்கிறார்.
